ஓ.பன்னீர்செல்வத்துடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

OPS, O Panneerselvam, P. Vijayalakshmi O. Panneerselvam, O Panneerselvam Son, O Panneerselvam Caste, O Panneerselvam Son Marriage, O Panneerselvam Daughter, O Panneerselvam Latest News, O Panneerselvam Election 2016, O Panneerselvam Comedy

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். அப்போது குளச்சல் துறைமுக பணிகள் மற்றும் பல்வேறு சாலைப்பணிகள் பற்றி பேசினார்கள்.

முன்னதாக இன்று காலை விமான நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று நாளை தி.மு.க. போராட்டம் நடத்துகிறது. எதிர்க்கட்சி என்ற முறையில் போராடுகிறார்கள்.

போராட்டம் நடத்தித்தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியுமென்றால் நானும், பா.ஜனதாவும் முதலாவதாக இருப்போம். ஆனால் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காளையை காட்சி பொருள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அப்போதைய காங்கிரஸ் ஆட்சிதான் அதை செய்தது.

தமிழகத்துக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தின் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை. தற்போதைய பா.ஜனதா அரசு ஜல்லிக்கட்டு நடத்த முயற்சித்து வருகிறது.

செய்த தவறுக்காக காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை கைவிட வேண்டும். மோடி அரசு விவசாயிகளுக்கான நல்ல திட்டங்களை வகுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.