
டெல்லி: இன்று நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23 காசும், டீசல் விலை லிட்டருக்கு 89 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ள தாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த விலை உயர்வு இன்று (மே-31) நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
பெட்ரோல் டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை என சர்வதேச விலைகளுக்கு ஏற்ப விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.