பிரதமர் மோடி குஜராத்துக்கு இரண்டு நாள் பயணம்

Narendra Modi, Narendra Modi Video, Narendra Modi In Hindi, Narendra Modi Speech, Narendra Modi Height, Narendra Modi Birthday, Narendra Modi App, Narendra Modi Email Id, Narendra Modi BJP, Breaking News, India Time News, Indiatimenews.Com, India News, World News

குஜராத்தில்  இந்த (2017) ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த (குஜராத்) மாநிலத்தில் பா.ஜ.க தனது வெற்றியை தக்கவைத்துக் கொள்ள தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

பிரதமர் மோடி இந்த ஆண்டில் நான்காவது முறையாக குஜராத் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், காந்திஜியின் சபர்மதி ஆஸ்ரமத்தின் நூற்றாண்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நாளை குஜராத் செல்கிறார் என பா.ஜ.க அறிவித்துள்ளது.

பா.ஜ.க அறிக்கை

பிரதமர் நரேந்திர மோடி சபர்மதி ஆஸ்ரமத்தின் நூற்றாண்டு விழா மற்றும் ராஜ்கோட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் விழா, காந்திநகரில் நடக்கும் குடிநீர் திட்ட பணிகள், இளைஞர்களுக்கான விழாவிலும் மோடி பங்கேற்க உள்ளார் என தெரிவித்துள்ளது.