
எப்போதும் சில புதுமைகளைச் செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி. அந்த வகையில் இந்தியாவின் 70-வது சுதந்திர தினமான நேற்று ஒரு புதுமையான நிகழ்வை அவர் நடத்தினார். இது பலருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்படி செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் சுதந்திர தின வாழ்த்தை அனுப்பி இருந்தார். பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து வந்த வாழ்த்துச்செய்தி என்பதால் பலர் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.
பி.எம்.மோடி என்ற பெயரில் வந்த அந்த குறுஞ்செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உங்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திர போராட்ட வீரர்களை நாம் வணங்குவோம். ஜெய்ஹிந்த். டெல்லி செங்கோட்டையில் நான் ஆற்றிய சுதந்திர தின உரையை http;//pm-a-pp.nic.in; pm-a-pp?GM-ON1QQ-M-OE ஆகிய இணையதள ‘ஆப்’ இல் காணலாம்.