பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக பதவியேற்று 4 ஆண்டு நிறைவு

Pranab Mukherjee, Suvra Mukherjee, Sharmistha Mukherjee, Pranab Mukherjee Daughter, Pranab Mukherjee In Hindi, Pranab Mukherjee Car, Pranab Mukherjee Height, Pranab Mukherjee Twitter, Pranab Mukherjee Family,
Indian President Pranab Mukherjee

மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிராணப் முகர்ஜி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற காலங்களில், மத்திய மந்திரியாக பலமுறை சேவை செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக வலம் வந்துள்ளார். 2012-ம் ஆண்டு நடந்த குடியரசு தலைவருக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்று பதவியேற்றார்.

குடியரசு தலைவராக பிராணாப் முகர்ஜி பதவியேற்று, இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ராஷ்ட்ரபதி பவன் கொண்டாடி வருகின்றது.

இந்நிலையில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘குடியரசு தலைவராக பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவு செய்த பிரணாப் முகர்ஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். தாங்கள் இந்தியாவின் முதல் குடிமகனாக இருப்பதால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.’ என்று அதில் கூறியுள்ளார்.