சாக்ஷி மாலிக்கிற்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

Sakshi Malik

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்று தந்த சாக்ஷி மாலிக்கிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோரும், விளையாட்டு பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி உள்ளனர்.

சமூக வலைதளங்களிலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சாக்ஷி பதக்கம் வென்றதை அவரது சொந்த கிராமத்தில் உள்ள மக்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

 

இந்நிலையில் நாட்டிற்கும், மாநிலத்திற்கும் பெருமை தேடித் தந்த சாக்ஷிக்கு ரூ.2.5 கோடி பரிசு வழங்க உள்ளதாக அரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு அரசு பணியும் வழங்க உள்ளதாக அம்மாநில அரசு உறுதி அளித்துள்ளது.