பிரதமர் மோடி நவம்பர் மாதம் லட்சத்தீவு செல்கிறார்

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா மூன்று நாள் பயணமாக லட்சத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். லட்சத்தீவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கவாராத்தியும் இடம்பெறும். லட்சத்தீவில் மக்கள் வசிக்கும் தீவுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படும். மக்கள் வசிக்கும் அகாத்தி, அமினி, அந்த்ரோக், பித்ரா, காடாமாத், கால்பெனி, கவாராத்தி, கில்தாம், மினிகோய் மற்றும் செட்லாட் தீவுகளில் இரண்டு வருடங்களில் தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படும்.

பிரதமர் மோடி நவம்பர் மாதம் இறுதியில் லட்சத்தீவுக்கு வருவார். ஒரு நாள் முழுவதும் இங்குதான் இருப்பார்.

டெல்லி சென்றதும் லட்சத்தீவின் 10 தீவுகளுக்கான மேம்பாட்டு திட்டங்களை தயார் செய்ய உள்ளேன். அதிகமான சரக்கு கப்பல் வசதிகள் மற்றும் 4ஜி வசதிகளை தீவுகளுக்கு செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.