Narendra Modi, Narendra Modi Video, Narendra Modi In Hindi, Narendra Modi Speech, Narendra Modi Height, Narendra Modi Birthday, Narendra Modi App, Narendra Modi Email Id, Narendra Modi BJP, Breaking News, India Time News, Indiatimenews.Com, India News, World News

இந்திய ராணுவத்தின் வீரத்தை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் ஸ்ரீநகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ராணுவ வீரர்களை காங்கிரஸ் அவமதிப்பு செய்வதாக குற்றம் சாட்டினார். துல்லியத் தாக்குதல் குறித்த சந்தேகங்களை அக்கட்சி எழுப்பி வருவதை கண்டித்த மோடி, இந்திய ராணுவத்தின் வீரத்தை சந்தேகிக்க வேண்டாம் என்று கூறினார்.

ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை நிறைவேற்றாமல் காங்கிரஸ் காலம் கடத்தியதாகவும் மோடி குற்றம் சாட்டினார். உத்தரகாண்ட் வீரம் மிக்க இளைஞர்களின் பூமி என்று வரலாற்று சான்றுகளை அடுக்கிய பிரதமர், நாட்டுக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்துப் போராடும் வீரர்களை அவமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். 70 ஆண்டுகளாக நாட்டை சுரண்டி சூறையாடியவர்கள் தங்கள் பாவத்திற்கான பலனை அனுபவிக்க வேண்டும் என்றும், அதுவரை தாம் ஓயப்போவதில்லை எனவும் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.