ஆஸ்திரேலியா பிரதமரிடம் பிரதமர் மோடி கவலை

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விரைவர் எரித்துக் கொல்லப்பட்டதற்கு அந்நாட்டுப் பிரதமர் மால்கம் டர்ன்புல்லிடம் பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, மன்மீத் அலிஷேர், என்ற பஸ் டிரைவரை பயணி ஒருவன் திடீரென தீ வைத்து, கொளுத்தினான். இந்த கொடூர சம்பவம், பயணிகள் கண் முன்னே நடந்தது. இதில் காயமடைந்த டிரைவர் உட்பட ஆறு பேரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு, வெளியே கொண்டு வந்தனர். படுகாயம் அடைந்த டிரைவர், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு முன் இறந்தார். டிரைவருக்கு தீ வைத்தவன், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

இந்நிலையில் ஆஸி., பிரதமர் மால்கம் டர்ன்புல்லிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி அவரிடம், தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்தியாவுக்கு வரும் படி அவருக்கு அழைப்பு விடுத்தார். இதன்பின் இந்திய வம்சாவளி டிரைவர் கொலை குறித்து மோடி கவலை தெரிவித்தார். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்த டர்ன்புல், தனது அதிர்ச்சியையும் மோடியிடம் பகிர்ந்து கொண்டார்.