ராகுல் தலைமையில் காங்., கட்சியினர் பேரணி

Rahul Gandhi, Rahul Gandhi Election Rally, Rahul Gandhi Marriage, Priyanka Gandhi, Rahul Gandhi Marriage Photos, Rahul Gandhi Twitter, Rahul Gandhi Funny, Rahul Gandhi Biography, Rahul Gandhi Wiki, Breaking News, India Time News, Indiatimenews.Com, India News, World News
File Photo of Congress president Rahul Gandhi

டில்லி : டில்லியிலுள்ள காங்.,. தலைமையகத்திலிருந்து இந்திராவின் நினைவிடம் நோக்கி காங்., துணைத் தலைவர் ராகுல் தலைமையில் காங்., கட்சியினர் பேரணி மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு தினம் இன்று(31-10-16) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தலைநகர் டில்லியில் பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள இந்திராவின் நினைவிடம்(சக்தி ஸ்தல்) மூடப்பட்டுள்ளது. எனவே இன்று அங்கு இந்திராவின் நினைவு தினம் அனுசரிக்கப்படாது என அகில இந்திய காங்., கமிட்டி அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்திராவின் நினைவு தினத்தையொட்டி, ராகுல் தலைமையில் காங்., கட்சியினர் பேரணி மேற்கொண்டுள்ளனர். டில்லியிலுள்ள காங்.,. தலைமையகத்திலிருந்து இந்திராவின் நினைவிடம் வரை பேரணியாக செலகலும் அவர்கள், இந்திராவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.