பாஜக, Amith Shah, Sonal Shah Amit Shah, Jay Shah Amit Shah, Amit Shah Son, Amit Shah Daughter, Amit Shah Actor, Anilchandra Shah, Amit Shah Wife, Amit Shah Net Worth

டெல்லி: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்பதாக மட்டுமே தாம் தெரிவித்ததாகவும், நடிகர் ரஜினியை பாஜகவில் இணையுமாறு அழைக்கவில்லை அமித்ஷா என்றும் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.

அமித்ஷா பேட்டி:

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் அரசியல் தொடர்பாக ஆற்றிய உரை பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவர் பாஜகவில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது. அந்த சமயத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்பதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.

நடிகர் ரஜினிக்கு கமல் மறைமுக ஆதரவா?

இந்நிலையில், தாம் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ள அமித்ஷா, ரஜினியை பாஜகவில் இணைய அழைக்கவில்லை எனவும், கடந்த 70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் செய்யப்படாத பல்வேறு சாதனைகளை கடந்த 3 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் எட்டப்பட்டதாகவும் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.