Rajnath Singh, Savitri Singh Rajnath Singh, Rajnath Singh Son, Rajnath Singh Family Photo, Pankaj Singh, Neeraj Singh Rajnath Singh, Rajnath Singh Up Cm, Rajnath Singh Age, Anamika Singh

டில்லி: சீனாவுடனான இந்திய எல்லை நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டில்லியில் இன்று (மே-20) நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் ஜம்முகாஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாசலப் பிரதேசம் ஆகிய 5 மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். இமய மலையையொட்டிய மாநில முதல்வர்கள் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

இந்தக் கூட்டத்தில் இந்தியசீன எல்லைப் பாதுகாப்பு, எல்லைப்புற பிரதேசங்களில் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. மத்திய அரசுக்கும் மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் இடையில் ஒட்டுமொத்த எல்லைப் பாதுகாப்பு தொடர்பான ஒருங்கிணைப்பை அதிகரிப்பதே இக்கூட்டத்தின் நோக்கம் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.