ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கைதுக்கு தடை

Sasikala Pushpa, Sasikala Pushpa With Trichy Siva, Sasikala Pushpa Husband, Sasikala Pushpa Cast, Sasikala Pushpa And Siva Mp, Sasikala Pushpa With Siva, Sasikala Pushpa Family, Sasikala Pushpa Audio, Sasikala Pushpa Wiki, Indiatimenews, Indiatimenews.Com, Tamil Cinema News, Entertainment, India News, World News, Sports News, Video, And Photos
Sasikala Natarajan not fit to be AIADMK chief, says Sasikala Pushpa (File Photo)

புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா மதுரை ஐகோர்ட்டில் ஆஜராக வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவரை கைது செய்ய 6 வார காலத்திற்கு இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டது.

அதிமுகவை சேர்ந்த சசிகலா புஷ்பா டில்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்தார். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து அவர் அதிமுக பொது செயலர் ஜெ,. அவரது வீட்டிற்கு அழைத்து விசாரித்தார். தொடர்ந்த ராஜ்யசபாவில் அவரது பதவி ராஜினாமா குறித்து அறிவிக்க நிர்பந்திக்கப்பட்டார். ஆனால் சசிகலா ராஜ்யசபாவில் அழுதபடி மிரட்டல் வருவதாக கூறினார்.

இந்நிலையில் அவரது வீட்டில் பணியாற்றிய பானுமதி , ஜான்சிராணி ஆகியோர் சசிகலா மற்றும் அவரது கணவவர் , மகன் ஆகியோர் துன்புறுத்தியதாக தூத்துக்குடி மாவட்டத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரில் தம்மை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட் கிளையில் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர்.

அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது . வரும் 29ம் தேதி திங்கட்கிழமை கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அந்நாளில் ஜாமின் குறித்து முடிவு செய்யப்படும் என நீதிபதி வேலுமணி தெரிவித்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக சசிகலா புஷ்பா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதில் தம் மீதான குற்றச்சாட்டு பல ஆண்டுகளுக்கு முன்னதாக கூறப்பட்டது; தற்போது கிளப்பி சதி செய்கின்றனர். தமிழகத்தில் சென்று ஆஜராக அச்சம் இருப்பதாகவும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தார்.

மனுவை தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள் அளித்த உத்தரவில் ; சசிகலா புஷ்பா வரும் 29 ம் தேதி மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜராக வேண்டும். அதே நேரத்தில் அவரை கைது செய்வதற்கு 6 வார காலம் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.