மதம், ஜாதி பெயரால் வேறுபாடு பார்க்கக்கூடாது: மோடி

Narendra Modi, Narendra Modi Video, Narendra Modi In Hindi, Narendra Modi Speech, Narendra Modi Height, Narendra Modi Birthday, Narendra Modi App, Narendra Modi Email Id, Narendra Modi BJP, Breaking News, India Time News, Indiatimenews.Com, India News, World News

புதுடில்லி: மதம் மற்றும் ஜாதி பெயரால் வேறுபாடு பார்க்கக்கூடாது என பிரதமர் மோடி கூறினார். சர்தர் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு, டில்லியில் உள்ள தியான் சந்த் மைதானத்தில் நடந்த ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். முன்னதாக, படேல் குறித்த சிறப்பு தபால் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

பின்னர் மோடி பேசுகையில், படேல், காந்தியுடன் இணைந்து சுதந்திர போராட்ட இயக்கத்தை துவங்கினார். அதனை பெரிய இயக்கமாக மாற்ற உதவினார். சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவை ஒருங்கிணைத்த பெருமை படேலையே சாரும். நாம் இன்று மூவர்ண கொடியின் கீழ் ஒற்றுமையாக நிற்க படேலே காரணம்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில் இயக்க மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை. இதற்கு படேலே காரணம். நாட்டின் ஒற்றுமைக்கும், படேல் தாரக மந்திரங்களை நாம் மறக்க கூடாது. மதம் மற்றும் ஜாதி பெயரால் வேறுபாடு கூடாது. இந்தியா வலிமையானதாகவும் சுய அதிகாரம் பெற்றதாகவும் மாற அனைத்து இந்தியர்களும் கனவு காண்கின்றனர். இந்தியா அனைத்து துறைகளிலும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனக்கூறினார்.