ரியோ ஒலிம்பிக்யில் சாக்சி மாலிக் வெண்கலப் பதக்கம்

Sakshi Malik

ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது.

58 கிலோ எடைபிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக், கிர்கிஸ்தான் வீராங்கனை டின்பெக்கோவாவை உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் சாக்சி மாலிக் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.

முன்னதாக காலிறுதியில் ரஷ்ய வீராங்கனை வேலரியா கோப்லோவா உடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்ததால் ரெபிசாஜ் சுற்றில் விளையாடிய சாக்ஷி மாலிக், மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ்ஜை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றது.

மல்யுத்த வீரங்கனை சாக்‌ஷி மாலிக் அரியான மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வெண்கலம் வென்றதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியா தற்போது 70-வது இடத்தில் உள்ளது.