SBI Bank, SBI Mobile Banking, SBI Online Account, SBI Recruitment 2016, SBI Personal Banking, SBI Po Admit Card, SBI Clerk 2016, SBI Clerk Result, State Bank Of India Ifsc Code, State Bank Of India

எஸ்பிஐ ஏடிஎம் வாயிலாக பணம் எடுக்கும் போது ரூ. 25 கட்டணம் வசூலிக்கப்படும். ரூபே அட்டை பயன்படுத்துபவர்கள் மட்டுமே இதிலிருந்து விலக்கு பெறுகிறார்கள்.

வாடிக்கையாளர்கள் ஒரே மாதத்தில் 4 முறைக்கு மேல் வங்கி கிளையில் பணம் எடுத்தால் அதற்கும் வாரியாக கட்டணம் வசூலிக்கப்படும். ஒவ்வொரு முறையும் ரூ.50 சேவைக் கட்டணமும் அத்துடன் சேவை வரியும் வசூலிக்கப்படும். ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது பிற வங்கியின் ஏடிஎம் மையத்திலிருந்து எஸ்பிஐ அட்டையை பயன்படுத்தி பணம் எடுத்தால் ரூ.20 கட்டணமாகவும் அத்துடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்தால் ரூ.10 சேவை கட்டணமும் அத்துடன் சேவை வரியும் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி முகவர்கள் மூலம் டெபாசிட் செய்யப்படும் ரூ. 10,000 தொகைக்கு 0.25% கட்டணமும், குறைந்தது ரூ.2 முதல் அதிகபட்சமாக ரூ.8 வரை சேவை கட்டணமாகவும் வசூலிக்கப்படும். அதேபோல் வங்கியில் இருந்து பணம் எடுக்கவும் சேவைக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும்.

ரூ.2000 பணம் எடுத்தால் 2.50% சேவை கட்டணம் மற்றும் குறைந்தபட்சமாக ரூ.6 வரை சேவை வரியும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.