மோடியின் சலிப்பான பேச்சால் கேஜரிவால் தூக்கம்: சிசோடியா

Arvind Kejriwal, Arvind Kejriwal Wife, Delhi News, Arvind Kejriwal Family, Arvind Kejriwal Mobile Number, Aap Party News, Arvind Kejriwal Education, Arvind Kejriwal Latest News, Kejriwal Twitter, Breaking News, India Time News, Indiatimenews.Com, India News, World News

செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரை மிகவும் சலிப்பானதாக இருந்ததால் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தூங்கியிருக்கக் கூடும் என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.

தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாற்றியபோது, அந்நிகழ்வில் பங்கேற்ற தில்லி முதல்வர் கேஜரிவால், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் கண்களை மூடியபடி அமர்ந்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. பல தொலைக்காட்சிகளில் இந்த காட்சிகளை வைத்து விவாதங்கள் நடத்தப்பட்டன.

இது தொடர்பாக மணீஷ் சிசோடியா தனது சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பது: பிரதமர் மோடியின் உரை பெரும் சலிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.

அதனால் ஒருவேளை கேஜரிவால் கண்கள் அசந்து தூங்கியிருக்கக் கூடும். அந்த அளவுக்கு மோடியின் பேச்சு பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை.

காஷ்மீர் பிரச்னை, தலித்துகள் மீதான தாக்குதல், விவசாயிகள் தற்கொலை, புதிய கல்விக் கொள்கை, கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவது, நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட  முக்கிய விவகாரங்கள் தொடர்பாக மோடி தனது உரையில் எதையும் குறிப்பிட்டு பேவில்லை. மாறாக, வெறும் சலிப்பை ஏற்படுத்தும் வகையில் அவரது உரை இருந்தது என்று சிசோடியா குறிப்பிட்டுள்ளார்.

தில்லி கலாசாரத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கூறுகையில், ஒலிம்பிக்கில் “மிகவும் சலிப்பான பேச்சு’ எனும் போட்டி வைத்தால் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை தங்கப் பதக்கம் பெறும் என குறிப்பிட்டார்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஆஷுதோஷ் கூறுகையில், “பிரதமர் மோடியின் பேச்சு, எவ்வித இலக்கும் இல்லாமல் உள்ளது’ என்றார்.