சோனியா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Sonia Gandhi, Sonia Gandhi Before Marriage, Sonia Gandhi Bar Dancer, Sonia Gandhi Educational Qualification, Sonia Gandhi And Rajiv Gandhi Love Story, Sonia Gandhi Cancer, Sonia Gandhi In Hindi, Sonia Gandhi House, Sonia Gandhi Net Worth, Indiatimenews, Indiatimenews.Com

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் சோனியா காந்தி கடந்த 2-ஆம் தேதி பிரசாரம் செய்தார். அப்போது அவருக்கு இடது தோள் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, வாரணாசி பிரசாரத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு தில்லிக்கு சோனியா காந்தி திரும்பினார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் முதலில் அவர் அனுமதிக்கப்பட்டார். பிறகு அங்கிருந்து சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அந்த மருத்துவமனையில் சோனியா காந்திக்கு இடது தோளில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அதையடுத்து, மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சர் கங்கா ராம் மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி ஞாயிற்றுக்கிழமை தனது இல்லத்துக்கு திரும்பினார். அவரை ஓய்வெடுக்கும்படி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து இல்லம் திரும்பிய சோனியா, தனது அன்றாட பணிகளை ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், திடீரென முதுகு, தோள்பட்டைகளில் ஏற்பட்ட வலி காரணமாக தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தில்லி மருத்துவமனையில் 10 நாள்களுக்கும் மேலாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, சிகிச்சை முடிந்து தனது இல்லத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திரும்பினார்.

வரும் வாரத்தில் அவர் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக மீண்டும் வருவார் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது