Tamil nadu Assembly, Mk stalin

இன்று மாலை ஜனாதிபதியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு. அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்த சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.

விஜய் மல்லையாவின் ரூ.680 கோடி சொத்துக்கள் ஏலம்?

ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டதால் கர்நாடகாவில் உள்ள பரப்பர அக்ஹகார சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு உள்ளார்.

சசிகலாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதிய முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்திருந்ததால் அவருக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்து 15 நாளில் மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து கடந்த 18-ந்தேதி தமிழக சட்ட சபையில் நம்பிக்கை தீர்மானத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

அப்போது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பேசும்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இல்லையென்றால் எம்.எல்.ஏ.க்கள் 1 வாரம் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து விட்டு வந்ததும் வாக்கெடுப்பு நடத்தலாம் என்று வலியுறுத்தினார்கள்.

ஆனால் சபாநாயகர் இதை ஏற்கவில்லை. அப்போது தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் தங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்கள். இதனால் சபையில் பயங்கர அமளி ஏற்பட்டது. புத்தகங்கள் கிழித்து வீசப்பட்டன. மைக்குகள் உடைக்கப்பட்டன.

கடுமையான அமளியின் இடையே 2 முறை அவை நடவடிக்கைகளை சபாநாயகர் தனபால் தள்ளி வைத்தார்.

அப்போது அமளி நீடித்ததால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்ற அவைக்காவலருக்கு சபா நாயகர் உத்தரவிட்டார். அதன்பிறகு சபாநாயகர் தனது அறைக்கு சென்று விட்டார்.

சபாநாயகர் அவையில் இல்லாத சமயத்தில் கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் சே‌ஷசாயி தலைமையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சபை வராண்டாவில் நின்று கொண்டு தி.மு.க. எம்.எல். ஏ.க்களை வெளியேற்றினார்கள்.