அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

Tamil Nadu bus strike, Tamil Nadu State Transport Corporation, Tamil News, Tamil Nadu news, Chennai News, India news, news in tamil, cinema news

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், பேருந்துகள் இல்லாமலும், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாலும் சென்னையில் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையைப் பொறுத்தவரை கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கும், இதேபோல பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகரம் முழுவதிலும் சுமார் 3 ஆயிரத்து 500 பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று பிற்பகல் முதலே, பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இன்று காலை தொடங்கி 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள்

ஆளுங்கட்சியின் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களை வைத்தும் ஒப்பந்த ஊழியர்களை வைத்தும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்படுவதால், அலுவலகங்களுக்கும் பல்வேறு பணிகளுக்கும் செல்வதற்கு பேருந்துகளை நம்பியுள்ளவர்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இன்று காலை பல்வேறு ஊர்களில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்திறங்கியவர்கள் அவரவர் பகுதிக்கு செல்வதற்கு தனியார் ஒப்பந்த பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிறுவனங்கள் சார்பாக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளில் இரு மடங்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.