தமிழர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்: பாரதிராஜா

Bharathiraja, Bharathiraja Son, P. Bharathiraja Movies, Bharathiraja Caste, Director Bharathiraja Family Photos, Bharathiraja Songs, Bharathiraja Awards, Bharathiraja Film Institute, Bharathiraja Daughter

சென்னை: கடந்த 21-ம் தேதி மெரினாவில் தடையை மீறி நினைவேந்தல் கூட்டம் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகிய 4 பெர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தி உள்ளிட்டோரை விடுதலை செய்யாவிட்டால் தமிழர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்த் திரைப்பட கலைஞர்கள் சார்பில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாலாஜிசக்திவேல், வெற்றிமாறன், அமீர், ராம் உள்ளிட்டவர்கள் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

”தூங்கிக்கொண்டிருப்பவர்களை எல்லாம் தட்டி எழுப்பி அரசியலுக்கு வரவழைக்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறோம். குழந்தை நட்சத்திரமாக இருப்பவரை நீங்கள் எப்போது அரசியலுக்கு வரப்போகிறீர்கள் என்ற கேள்வியையும் நாம்தான் கேட்டுக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில்தான், கூத்தாடிகள் நாடாள முடியுமா? என்ற ஒற்றை சொல் தடம் புரண்டுவிட்டது. இந்த மண்ணுக்கென ஒரு கதை, கலாச்சாரம் இருக்கிறது.

அந்த நால்வரும் கொலை செய்தார்களா? கொள்ளை அடித்தார்களா? நக்சலைட்டா? எதற்காக அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும். மத்திய, மாநில அரசை விமர்சிக்கக் கூடாதா?

தமிழன் மட்டும்தான் வேறு எந்த ஊரிலும் பதவி வகிக்க முடிவதில்லை. மற்ற யார் வேண்டுமானாலும் இங்கே வரலாம். போகலாம் என்ற நிலை இங்கேதான் இருக்கிறது. இனம், மொழி, உணர்வு உள்ளிட்ட விஷயங்களில் துருப்பிடித்துக் கிடக்கிறோம். மண்ணுக்கு சொந்தக்காரன்தான் தலைவனாக இருக்க வேண்டும்.