Piyush Goyal, Piyush Goyal Contact, Seema Goyal, Ved Prakash Goyal, Radhika Goyal, Piyush Goyal Investment Banker, Dhruv Goyal, Chandrakanta Goyal, Piyush Goyal Finance Minister, Tamil News, Tamil Nadu News, Chennai News, India News, News In Tamil, Cinema News

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தற்போது 6 ஆயிரத்து 780 மெகாவாட் அணு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில்,தலா 700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய 10 அணு உலைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பெண்களுக்கான பேறுகாலப் பலன்கள் திட்டத்தின்படி முதன்முறையாக குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து பெண்களுக்கும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இத்தொகை பெண்களின் வங்கி கணக்கில் 3 தவணையாக வரவு வைக்கப்படும்.பதவிக்காலம் முடிந்த அமைச்சர்கள், அதிகாரிகள், அரசு வீடுகளை காலி செய்யாவிட்டால் அபராதம், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னப் பகுதிகளில் அரசு கட்டுமானங்கள், இந்திய வேளாண்கழகம் உள்ளிட்டவற்றுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.