ஸ்டாலின் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

Mk Stalin, Mk Alagiri, Durga Stalin, Mk Stalin Contact Number, Senthamarai Stalin, Mk Stalin Blood Cancer, M K Stalin Daughter, Mk Stalin Images, Mk Stalin Family, Vijay Mally, Kingfisher House, Kingfisher, Kingfisher Airlines, Kingfisher House Mumbai, Kingfisher Beer, Kingfisher, The India Time News, Indiatimnews.Com, Indiatimenews

தமிழகத்தில் 2011–ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை, கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினும், அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமியும் போட்டியிட்டனர். இதில் சைதை துரைசாமியைவிட, 2 ஆயிரத்து 734 வாக்குகள் கூடுதலாக பெற்று மு.க.ஸ்டாலின் வெற்றிப் பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், சைதை துரைசாமி தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், ‘தேர்தலின்போது துணை முதல்–அமைச்சர் பொறுப்பில் மு.க.ஸ்டாலின் இருந்ததார். அதனால், பண பலம், ஆள் பலம், அதிகார பலம் ஆகியவற்றின் மூலம் ஏராளமான முறைகேடுகளை செய்து, வெற்றிப் பெற்றுள்ளார். எனவே, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எம்.வேணுகோபால் விசாரித்து வருகிறார். சைதை துரைசாமி கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். பின்னர் தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். எதிர்மனுதாரரான மு.க.ஸ்டாலினிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க.ஸ்டாலினின் தேர்தல் கணக்கு தொடர்பான விவரங்களை வரும் 11-ம் தேதி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.