விமான நிலையங்களிலும் பாதுகாப்பை ‘உஷார்’ உள்துறை அமைச்சகம்

SAARC summit, Rajnath Singh, Rajnath Singh Address, Savitri Singh, Rajnath, Rajnath Singh Family Photo, Rajnath Singh Son, Pankaj Singh, Rajnath Singh Bjp, Rajnath Singh Pakistan, Breaking News, India Time News, Indiatimenews.Com, India News, World News

தீவிரவாத அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு மற்றும் சோதனைகளை ‘உஷார்’படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

விமான நிலைய பாதுகாப்புக்கு என பிரத்யேகமாக பாதுகாப்பு படை பிரிவை உருவாக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் கீழ் நாட்டின் அனைத்து விமான நிலையங்களின் சோதனை மற்றும் பாதுகாப்பை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 98 விமான நிலையங்களில் 59 விமான நிலையங்களுக்கு மத்திய தொழிற் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கி வருகிறது. ஆனால், 39 விமான நிலையங்களுக்கு இதுபோன்ற பாதுகாப்பு ஏதும் இல்லை. குறிப்பாக, அதிக பதற்றம் நிறைந்த 56 விமான நிலையங்களில் 37-க்கு மட்டுமே மத்திய தொழிற்பாதுகாப்பு படை பாதுகாப்பு உள்ளது.

இந்நிலையில், சர்வதேச அளவில் அவ்வப்போது விமான நிலையங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய உள்துறை, உளவுத்துறை, மத்திய தொழிற் பாதுகாப்பு படை, விமானத்துறை பாதுகாப்பு ஆணையம் ஆகியவை இணைந்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தணிக்கை செய்து அடுத்த 20 நாட்களுக்குள் அறிக்கையை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக, விமான நிலையங்களுக்குள் வரும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்தல், விமானத்தில் கொண்டு வரப்படும் பொருட்கள் மற்றும் சரக்குகளை தீவிரமாக சோதித்தல், விமான நிலைய எல்லைக்குள் வானில் அத்துமீறி பறக்கும் ஆளில்லா குட்டி விமானங்களை கைப்பற்றுதல், பயணிகளின் உடமைகளை சோதித்தல் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.