Flipkart, Flipkart Wallet, Flipkart Sale, Flipkart Mobile, Flipkart Shoes, Flipkart App, Flipkart Login, Flipkart Seller, Flipkart Customer Care
ஆப்பிள் பிரியர்களுக்கு இந்தியாவின் பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் ஐபோன் 6 சாதனத்தை ரூ.3,999 என்ற அதிரடி விலைக்கு விற்பனை செய்து வருகிறது.
ஆப்பிள் ஐபோன் 6 ஸ்மார்ட்போன் எக்சேஞ்ச் சலுகையின் கீழ் ரூ.3,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்த சலுகையின் கீழ் ஐபோன் மாடல் ரூ.24,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது. ஐபோன் 6 (16ஜிபி ஸ்பேஸ் கிரே நிறம்) ரூ.27,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. முழுமையான தள்ளுபடி பெறும் போது வாடிக்கையாளர்கள் இதனை ரூ.3,999 விலைக்கு வாங்க முடியும்.
எக்சேஞ்ச் சலுகையை தவிர ரூ.9000 வரை தள்ளுபடியு்ம வழங்கப்படுகின்றது. இது ஏற்கனவே விலையில் சேர்க்கப்பட்டு சாதனத்தின் விலை ரூ.27,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு 5% வரை கூடுதல் தள்ளுபடி பெற முடியும்.
பிளிப்கார்ட் எக்சேஞ்ச் சலுகையில் செல்லுபடியாகும் ஸ்மார்ட்போன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி அதிகபட்ச தள்ளுபடி ஐபோன் 6S போனுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் 22,000 ரூபாய் தள்ளுபடி பெற ஐபோன் 6S போனினை எக்சேஞ்ச் செய்ய வேண்டும்.