ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு சிறை

Supreme Court, Supreme Court India, Supreme Court Cause List, Supreme Court Case Status By Name, Supreme Court Judgement, Supreme Court Display Board, Supreme Court Of India Judges, Supreme Court Recruitment, Supreme Court Of India Chief Justice

ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 5 ஆண்டு வரை சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்க வழி செய்யும் புதிய சட்ட மசோதா குறித்து, மத்திய அமைச்சரவைக் குழு இன்று(ஆக.,30) விவாதிக்க உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு லோக்சபாவில் ‛நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2015′ தாக்கல் செய்தது. இது தொடர்பான பரிந்துரைகளை கடந்த ஏப்ரல் மாதம் பார்லி., நிலைக்குழு அளித்தது. 30 ஆண்டுகள் பழமையான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மாற்றும் வகையில் அமைந்துள்ள இச்சட்டத்தை ஆய்வு செய்து, நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் சில பறிந்துரைகளை ஏற்றுக் கொண்டது. அதில் கலப்படம் செய்தால் தண்டனைகளை கடுமையாக்குவது, ஏமாற்று விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு தண்டனை விதிப்பது உள்ளிட்டவையும் அடங்கும்.

இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம், நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் டில்லியில் இன்று(ஆக.,30) நடைபெறுகிறது. இதில் இப்பரிந்துரைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இப்பரிந்துறைகள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், ஏமாற்று விளம்பரங்களில் பிரபலங்கள் நடித்தால் முதல்முறை ரூ.10 லட்சம் அபராதம், 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 2வது முறையாக அதே தவறைச் செய்தால், ரூ.50 லட்சம் வரை அபராதமும், 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்க முடியும். கலப்படம் செய்பவர்களுக்கும் இதே ஜெயில் தண்டனை, அபராதத்துடன் உரிமமும் ரத்து செய்யப்படும்