ஜூன் 3-ம் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை கட்சிகள் பரிசோதிக்கலாம்: தேர்தல் கமிஷன்

Voting Machines In India, Electronic Voting Machine Project, Electronic Voting Machine Video, Electronic Voting Machine Pdf, Evm Machine Tampering, Voting System In India, Electronic Voting Machine Manufacturers, Electronic Voting Machine Ppt, Voting Machine 2017
டில்லி: ஜூன் 3-ம் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை கட்சிகள் பரிசோதிக்கலாம்: தேர்தல் கமிஷன். உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை முன்புபோல வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இதையடுத்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தேர்தல் கமி‌ஷன் முடிவு.
வரும் ஜூன் 3 ஆம் தேதி முதல் தேசிய மற்றும் மாநில கட்சிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கலாம். இதற்கு  அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 3 பேரை நியமிக்கலாம். மே 26 ஆம் தேதி 5 மணிக்குள் கட்சிகள் இதை உறுதி செய்ய வேண்டும். தேசிய, மாநில கட்சிகள் முன் செயல் விளக்கம் நடைபெறும்
தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியதாவது:-
5 மாநில தேர்தலுக்கு பிறகு தான் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என புகார் கூறப்படுகிறது.  வாக்கு இயந்திரம் மீது சந்தேகம் எழுப்புபவர்கள் அதை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரமும் சமர்பிக்கவில்லை. நம்பகத்தன்மையை உறுதி செய்ய தேர்தலின் போது ஒப்புகைச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு முறை ப்ரோகிராம் செய்தால் சிப் எதுவும் பொருத்த முடியாது.
முழு பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என பகிரங்கமாக அறிவித்துள்ளவர்கள், இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை.