பயங்கரவாதத்திற்கு எதிராக சமரசம் கிடையாது: ராஜ்நாத் சிங்

Rajnath Singh, Rajnath Singh Address, Savitri Singh, Rajnath, Rajnath Singh Family Photo, Rajnath Singh Son, Pankaj Singh, Rajnath Singh Bjp, Rajnath Singh Pakistan, Breaking News, India Time News, Indiatimenews.Com, India News, World News

புதுடில்லி: முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக் பேச்சுக்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், இந்த விவகாரத்தில் அரசு கவனமுடன் உள்ளது எனவும், பயங்கரவாதத்திற்கு எதிராக சமரசம் கிடையாது எனவும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

கடந்த வாரம் வங்கதேசத்தில் உள்ள உணவகத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவர், மகாராஷ்டிராவில் உள்ள ஜாகிர் நாயக் பேச்சில் தாங்கள் கவரப்பட்டதாக கூறியிருந்தார். இதனையடுத்து ஜாகிர் நாயக் குறித்த பேச்சு எழுந்தது.

இந்நிலையில், ஜாகிர் நாயக் பேச்சுக்களை ஒளிபரப்பிய கேபிள் டிவிக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாகாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்துள்ளது. நாயக் பேச்சுகுறித்து விசாரணை நடத்த மும்பை போலீசாரை மகாராஷ்டிரா மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அவரது பேச்சு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் பட்நாவிஸ் கூறியுள்ளார். மேலும், ஜாகிர் நாயக் சமூக வலைதளம், அவரது தொண்டு நிறுவனத்திற்கு பணம் வருவது குறித்தும் விசாரணை நடத்தப்படும் எனக்கூறினார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், ஜாகிர் நாயக்குடன் மேடையில் தோன்றியதற்கு குறைகூறுபவர்கள், குண்டுவெடிப்பில் தொடர்புடைய பிரக்யா தாக்கூரை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சந்தித்தது ஏன்? பிராக்யா மீது குண்டுவெடிப்பு வழக்கு உள்ளது. ஆஜால், ஜாகிர் நாயக் மீது தற்போது வரை வழக்கு ஏதும் உள்ளதா? ஜாகிர்நாயக்குடன் மேடையை பகிர்ந்து கொண்ட யோகா குரு பாபா ராம்தேவ் குறித்த நிலை என்ன என கேள்வி எழுப்பினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ., திக்விஜய் சிங் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், அவர் செய்தது சரி என்றாகிவிடாது. காங்கிரஸ் தொடர்ந்துஇது போன்ற செயல்களை வெட்கப்படாமல் செய்து வருகிறது. திக் விஜய் சிங் ஹபீஸ் சயீதுடன் இணைந்து தோன்றினாலும் ஆச்சர்யமில்லை. பிராக்யா தவறாக வெடிகுண்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான டிவி, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தடை செய்யப்பட்டதாகவும், ஆனால் பா.ஜ., ஆட்சியில் அந்த டிவி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.