மாயமான விமானத்தை 4 நாளாக தேடியும் முன்னேற்றம் இல்லை

Manohar Parrikar, Medha Parrikar, Avdhut Parrikar, Manohar Parrikar Son, Manohar Parrikar Contact Number, Manohar Parrikar Simplicity, Manohar Parrikar CM, Manohar Parrikar Speech, Manohar Parrikar BJP, Breaking News, India Time News, Indiatimenews.Com, India News, World News

சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் நகருக்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு 29 பேருடன் புறப்பட்டு சென்ற ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் திடீரென்று மாயமாகிவிட்டது. விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படையினர் வங்காள விரிகுடா கடற்பகுதியில் விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

விமானம் மாயமானதாக கருதப்படும் பகுதியில் கடலின் ஆழம் சுமார் 3,500 மீட்டர் இருக்கும் என்பதால் தேடுதல் பணி மிகவும் சவாலாக இருப்பதாகவும், தேடுதல் பணிக்கு உதவும் வகையில் செயற்கைக் கோள் தகவல்களை பெற இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) உதவியை நாடி இருப்பதாக கடற்படை தெரிவித்தது. மாயமான விமானத்தை தேடும் பணி 4-வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடலோர பாதுகாப்பு படை ஐ.ஜி. ராஜன்பர்கோத்ரா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாயமான விமானத்தின் பாகமோ, வீரர்களோ இதுவரையில் தென்படவில்லை. விமானத்தை தேடும் பணி தொடர்ந்து 4-வது நாளாக நீடிக்கிறது. கடலில் எதுவும் கிடைக்காததால் தேடும் பகுதியை விரிவுபடுத்தி உள்ளோம். விமானத்தை தேடும் பணிக்கு ஆபரேஷன் தலாஷ் என பெரிடப்பட்டுள்ளது.

விமானத்தை தேடும் பணிக்கு இஸ்ரோ, என்.ஐ.ஒ.டி. உள்ளிட்ட அரசு அமைப்புகள் உதவி செய்து வருகின்றன. காணாமல் போன விமானத்தில் பயணம் செய்தவர்களில் முத்துகிருஷ்ணன் மட்டுமே கடலோர பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்.