திகார் சிறையில் ஜாமீனில் வெளியே வந்தார் டிடிவி தினகரன்

டிடிவி தினகரன், Ttv Dinakaran, Ttv Dinakaran Wife, Ttv Dinakaran Family, Ttv Dinakaran Age, Ttv Dinakaran History, Ttv Dinakaran Son, Ttv Dinakaran Biodata, Ttv Dinakaran Date Of Birth, Ttv Dinakaran Family Photos

டெல்லி: அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டில் கைதனார். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கடந்த ஏப்ரல் 25-ந் தேதி தினகரன் டெல்லியில் கைது செய்யப்பட்டார்

டிடிவி தினகரன் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு

டெல்லியில் பிடிபட்ட பிரபல இடைத்தரகர் சுகேஷ் கொடுத்த தகவல்களைத் தொடர்ந்து டெல்லி போலீசார் டி.டி.வி. தினகரனை வரவழைத்து விசாரணை நடத்தினார்கள்.

பிறகு அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் அவருக்கு  உதவியதாக அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவர்கள் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

குரல் மாதிரியை பதிவு செய்ய விருப்பமில்லை: டிடிவி தினகரன்

அவர்கள் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி மனு செய்தனர். அந்த மனுவை விசாரித்த டெல்லி கோர்ட்டு டி.டி.வி. தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டது.

டி.டி.வி. தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோருக்கு தங்களுடைய பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.