உதயநிதி அரசியலில் களமிறங்கினார்

Udhayanidhi Stalin, Udhayanidhi, MK Stalin son

உதயநிதி ஸ்டாலின் நடிப்பதே அரசியலில் களமிறங்கத் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். பல ஆண்டுகள் திமுகவில் பல பதவிகளில் இருந்த மு.க.ஸ்டாலின் இப்போது தான் திமுக தலைமையை கைப்பற்றி இருக்கிறார்.

திருச்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம்

உதயநிதியும் படிப்படியாக கட்சி பதவிகளில் வர வேண்டும் என ஸ்டாலின் குடும்பத்தினர் விரும்புகின்றனர். இதன் தொடக்கமாக இன்று உதய நிதி ஸ்டாலின் சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற திமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

மேடையில் அவருக்கு முதல் வரிசையில் சீட் வழங்கப்பட்டது. ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்த உதயநிதியை யாரும் கண்டுகொள்ளாத நிலையில், தற்போது அவர் போராட்டத்தில் கலந்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விரைவில் ஏதாவது அரசியல் படத்தில் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.