உமா மகேஸ்வரி கொலை வழக்கு: ஆயுள் தண்டனை

Chennai High Court, Madras High Court Madurai Bench, Madras High Court Display Board, Writ Petition Status Madras High Court, Madras High Court Judges, City Civil Court Chennai, Madras High Court Recruitment 2016, High Court Cause List, E Courts Chennai
Chennai High Court (FILE PHOTO)

சென்னை: ஐ.டி. ஊழியர் உமா மகேஸ்வரி கொலையில் 3 பேரின் ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2014-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி சிறுசேரி அருகே உமா மகேஸ்வரி கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். மேற்குவங்கத்தை சேர்ந்த உத்தம் மண்டல், ராம் மண்டல், உஜ்ஜல்மண்டல் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் 2014-ம் ஆண்டு ஏற்கனவே ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

இதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் உமா மகேஸ்வரி குடும்பத்துக்கு 4 மாதத்தில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.