உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு கோர்ட் சம்மன்

Akhilesh Yadav, Akhilesh Yadav Contact Number, Dimple Yadav, Akhilesh Yadav Marriage, Akhilesh Yadav And Dimple Yadav Love Story, Akhilesh Yadav In Hindi, Akhilesh Yadav Son, Akhilesh Yadav Smartphone, Mulayam Singh Yadav,

முசாபர் நகர்: தேர்தல் விதிமுறையை மீறிய வழக்கில் உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் நேரில் ஆஜராக கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில், சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. அகிலேஷ் தனது கட்சியை சேர்ந்த தியாகி என்பவருக்காக கடோலி நகரத்தில் கடந்த 2007-ம் ஆண்டு செப்., 1ம் தேதி பிரசாரம் செய்தார்.

அப்போது தேர்தல் விதிமுறைக்கு அப்பாற்பட்டு அதிக அளவில் வாகனங்கள் அவருக்குப்பின் சென்றதாக தேர்தல் கமிஷன் புகார் அளித்தது. இதன்அடிப்படையில் ஐ.பி.சி., 171வது விதியின் படி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு நேற்று வந்தது. வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்ற நீதிபதி அடுத்த மாதம் 22-ம் தேதி(செப்., 22) அகிலேஷ் நேரில் ஆஜராக வேண்டும் எனவும், அவருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டார்.