பத்ரிநாத், கேதார்நாத், உத்தரகாண்ட், Badrinath, Badrinath Movie, Badrinath Temple History, Badrinath Songs, Badrinath Photos, Badrinath Temple History In Hindi, Badrinath Cricketer, Badrinath God, Badrinath Yatra
படம்: Airnewsalerts

உத்தராகண்டில் ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட பல்வேறு புனித தலங்கள் உள்ளன. பத்ரிநாத் செல்லும் பாதையில் திடீர் என நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர் என்று உத்தரகாண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

பத்ரிநாத் செல்லும் பாதையில் திடீர் நிலச்சரிவு

பத்ரிநாத் கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் ஆங்காங்கே பரிதவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், 12 ஆயிரம் பக்தர்கள் சிக்கி தவிக்கவில்லை எனவும், 1800 சுற்றுலா பயணிகள் மட்டுமே பாதிக்கப்பட்டதாகவும் உத்தரகாண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.

நிலச்சரிவில் சிக்கிய அனைவருமே மீட்கப்பட்டு விட்டதாகவும், துரதிருஷ்டவசமான எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. நெடுஞ்சாலையில் உள்ள மணல் குவியல்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் பாதை திறக்கப்படும். தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று உத்தரகாண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத்  தெரிவித்தார்.