Vijay Mallya, Vijay Mallya Loan, Vijay Mallya Car Collection, Vijay Mallya News, Laila Mallya, Vijay Mallya Net Worth, Siddharth Mallya, Vijay Mallya Son, Vijay Mallya Ferrari Story, Breaking News, India Time News, Indiatimenews.Com, India News, World News

இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மும்பை சொகுசு பங்களா உள்ளிட்ட 680 கோடி ரூபாய் சொத்துக்களை அவருக்குக் கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் ஏலம் விடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி ஏடிஎம்-யில் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள்

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா கிங்பி‌ஷர் விமான சேவையையும், மது பானங்கள் தயாரிப்பு தொழிலையும் வெற்றிகரமாக நடத்தி வந்தார். அவரது கிங்பி‌ஷர் பீர் உலக அளவில் புகழ் பெற்றது. கிங்பி‌ஷர் விமான சேவை நிறுவனத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த இழப்பு அவரது மதுபான சாம்ராஜ்ஜியத்தையும் சேர்த்து சரித்து விட்டது.

விஜய் மல்லையா ஐ.டி.பி.ஐ  உள்ள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குச் சென்று தஞ்சம் அடைந்தார். அவரை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இங்கிலாந்து சம்மதம் தெரிவித்துள்ளது. எனவே அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்
என்று கூறப்படுகிறது.

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் விற்பனை மற்றும் பங்குகளில் பாக்கித்தொகையாக மல்லையா 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டியதுள்ளது. மல்லையா இனி அந்த பணத்தை திருப்பி தர மாட்டார் என்று கருதியதால் அவருக்கு கடன் கொடுத்த வங்கிகள், நிறுவனங்கள் அவரது சொத்துக்களை ஏலம் விட்டு பணத்தை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதற்காக டெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ஸ்காட்லாந்து, ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ள மல்லையாவின் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.