கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாம் இடம்

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 861 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 847 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஹசில்வுட் முதலிடத்தில் உள்ளார்.

சிறந்த ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா 117 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இந்தியா 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இலங்கை அணி 88 புள்ளிகளுடன் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.