மத்திய அரசுக்கு நடிகர் விஷால் கோரிக்கை!

Vishal, Vishal Marriage, Vishal Songs, Vishal Family, Actor Vishal Family Photos, G. K. Reddy Vishal, Vishal Height, Vikram Krishna, Aishwarya Krishna, Indiatimenews, Indiatimenews.Com, Tamil Cinema News, Entertainment, India News, World News, Sports News, Video, And Photos

இணையதளங்களில் திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா தொடர்பான ஆலோசனை கூட்டம் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நடிகர் விஷால், கமல், கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், இணையதளங்களில் திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, தமிழகம் வளர்ச்சி அடைய வேண்டுமானால் நிலையான ஆட்சி அவசியம் என தெரிவித்தார்.