ஒலிம்பிக்யில் பதக்கம் வென்ற சாக்ஷிக்கு உற்சாக வரவேற்பு

Sakshi Malik

புதுடில்லி: ரியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கிற்கு டில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை ‛பிரீ ஸ்டைல்’ பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற புதிய வரலாறு படைத்தார். பதக்கம் வென்ற பின் நாடு திரும்பிய சாக்ஷி, இன்று அதிகாலை டில்லி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள், பொதுமக்கள் அவரை வரவேற்றனர். சாக்ஷி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்த அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் சாக்ஷி மாலிக் குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டவர் மீது உ.பி., போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மீரட்டை சேர்ந்த நதீம் நம்பர்தார் என்ற அந்த நபர், சர்ச்சைக்குரிய வகையில் சாக்ஷி மாலிக் குறித்தும், அவரது மதம் குறித்தும் கருத்தை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள சைபர் கிரைம் போலீசார், தலைமறைவாகியுள்ள நதீமை தேடி வருகின்றனர்.