Arukutty Mla, Arukutty Mla Dance, Arukutty Caste, Vc Arukutty Caste, Vc Arukutty Mla Caste, Arukutty Mla Wiki, Paiya Gounder, Arukutty Mla Speech, Kavundampalayam Constituency, Tamil News, Tamil Nadu News, Chennai News, India News, News In Tamil, Cinema News

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த மாதம் 24-ந் தேதி காவலாளியை கொன்ற கும்பல் ஜெயலலிதா அறையில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் இது வரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரால் தேடப்பட்ட ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் பலியானார்.

கனகராஜின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இதுதொடர்பாக கனகராஜின் அண்ணன் தனபாலை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பினர். அதன்படி கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் வைத்து நேற்று 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.இதற்கிடையே பங்களாவில் இருந்து என்னென்ன பொருட்கள் கொள்ளை போனது? இந்த கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக் கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கனகராஜ், சயன் மற்றும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன் செல்போனில் தொடர்பில் இருந்தவர்கள் யார்-யார்? அவர்களுக்கும் கொள்ளை கும்பலுக்கு எந்த வகையில் தொடர்பு இருந்தது? என்று விசாரித்து வருகின்றனர்.

இதில் கனகராஜ் அடிக்கடி கோவை மாவட்டம் கவுண் டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க.எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியுடன் செல்போனில் தொடர்பில் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியை நாளை விசார ணைக்கு ஆஜராகுமாறு ஆத்தூர் போலீசார் நேரில் சம்மன் கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்ட அவர் இன்றே விசாரணைக்கு வருவதாக கூறினார். அதன் படி இன்று காலை அவர் ஆத்தூருக்கு புறப்பட்டு சென்றார்.

மாலையில் ஆறுகுட்டி எம்.எல்.ஏ ஆத்தூர் காவல்நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். ஆறுக்குட்டியிடம் விசாரணை அதிகாரி கேசவன் விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிந்த பின்னர் ஆறுக்குட்டி எம்எல்ஏ செய்தியார்களிடம் கூறியதாவது: